ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளி தொடர்ந்து 4வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி

அரசு பொதுத்தேர்வில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த லாவண்யாவையும், அவரது பெற்றோரையும் பள்ளியின் நிர்வாகிகள், முதல்வர் பாராட்டினர்.
குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதுடன், தொடர்ந்து நான்காவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். அதே போல் இந்த ஆண்டும் தேர்வு எழுதிய 168 மாணவ, மாணவியரும், தேர்ச்சி பெற்று 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளனர். இதில் லாவண்யா 587 மதிப்பெண்களும், பூமிகா 585 மதிப்பெண்களும், காவியா 576 மதிப்பெண்களும் பெற்றனர். கணித பாடத்தில் ஒருவர், கணினி அறிவியலில் இருவர், அடிப்படை மின் பொறியியல் பாடத்தில் ஒருவர், கணக்கு பதிவியல் பாடத்தில் நான்கு பேர், பொருளாதார பாடத்தில் ஒருவர், கணினி பயன்பாடுகள் பாடத்தில் நான்கு பேர், ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர், இவர்கள் வெற்றி பெற உழைத்த ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோரை பள்ளியின் தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி, பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu