ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்யுங்க! மாஜி அமைச்சர் தங்கமணி கோரிக்கை

ஊரடங்கு தளர்வை மறுபரிசீலனை செய்யுங்க!  மாஜி அமைச்சர் தங்கமணி கோரிக்கை
X
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்எல்ஏவுமான தங்கமணி, நாமக்கல்லில் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறது. அவற்றையும், ஆக்சிஜன் வசதியையும் அதிகப்படுத்த வேண்டும்.

கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதற்கான மருந்து கிடைப்பதில்லை. அந்த மருந்து கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் கொரோனா அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளை அதிகப்படுத்தியுள்ளனர். இதனால் கெரோனா தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்த தளர்வுகளை மறுபரிசீலீனை செய்ய வேண்டும் என்று அரசைக் கேட்டுள்ளோம். காலையில் இருந்து மாலை வரை கடைகள் திறந்திருக்கும்போது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இது தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!