'இன்று போய் நாளை வா': அலைக்கழிக்கும் ரேஷன்கடை ஊழியரால் மக்கள் அவதி

இன்று போய் நாளை வா: அலைக்கழிக்கும் ரேஷன்கடை ஊழியரால் மக்கள் அவதி
X

வீரப்பம்பாளையம் கிராம ரேசன் கடை.

குமாரபாளையம் அருகே, பொதுமக்களுக்கு உணவுப்பொருள் வழங்காமல் அலைக்கழிப்பதாக, ரேஷன் கடை ஊழியர் மீது, அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. அங்கு பணியாற்றி வருபவர் கார்த்தி, 24. இந்த ரேசன் கடையில் விவசாய கூலிகள், விசைத்தறி, மற்றும் இதர கூலி வேலைக்கு செல்வோர்தான் அதிகளவில் உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இக்கடையில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் மெசின் பழுதால், ரேகை பதியவில்லை. இதனால், பொருட்களை வாங்க வருவோரிடம், போயிட்டு நாளை வாங்க என்று பொதுமக்களை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, அலைக்கழிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.

இது பற்றி வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா கூறியதாவது: அந்த ரேசன் கடை பணியாளர், கடையில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் மெசின் பழுதாகி விட்டது என்றார். அப்படியே பழுதானாலும் நோட்டில் பெயர் விபரம் எழுதி வைத்துக்கொண்டு பொருட்கள் வழங்கலாம். அதனை மாற்றி பொதுமக்களை அலையவிடாமல் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: ரேசன் கடை ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் மெசின் பழுது என்பதை மறைத்து பல நாட்களாக எங்களை அலைய வைத்த இந்த பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
ai in future agriculture