ரேஷன் கடை முன்பு மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

ரேஷன் கடை முன்பு மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
X
குமாரபாளையம் ரேஷன் கடை முன்பு, மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையம் ராஜா வீதி காளியம்மன் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை உள்ளது. தொடர்மழையின் காரணமாக இந்த கடை முன்பு மழைநீர் அதிகம் தேங்கி, சேறும், சகதியுமாக, மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் இந்த சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டு கடையின் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. மேலும் பொருட்கள் வாங்கிக்கொண்டு பாரத்துடன், இந்த சகதியில் நடக்கையில் தவறி விழுந்து பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும், இந்த கடையின் முன்பு மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai future project