மழையை நம்பி விவசாய நிலத்தை தயார்நிலையில் வைத்துள்ள விவசாயிகள்
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் மழையை நம்பி விவசாய நிலத்தை விவசாயிகள் பண்படுத்தி வைத்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே மழையை நம்பி விவசாய நிலத்தை விவசாயிகள் விவசாய நிலத்தி னை முன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் இந்த வாய்க்காலில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், இதுவரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நிர்மட்டம் குறைந்து வருகிறது. கால்நடைகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் பயிரிடபட்டு ஒரு போகம் அறுவடை செய்திருக்கும் நேரம் இது.
ஆனால், தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக மழை குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழச்சி யடைந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் குறுகிய கால சாகுபடி செய்திட, டிராக்டர் கொண்டு உழுது, பயன்படுத்தி வைத்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட கூடாது என கர்நாடக மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழநாட்டிலும் விவசாயிகள் கர்நாடக அரசை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu