பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்
X

பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்தும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ரயில் நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் விரோத பிஜேபி அரசை கண்டித்து நாடு தருவிய மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர் .எஸ். ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது.

ரயில் மறியல் போராட்டத்திற்கு கட்சி செயற்குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் போலீசாரின் பாதுகாப்பை மீறி ரயில் தண்டவாள பகுதியில் குவிந்த போராட்ட குழுவினர் ஈரோட்டில் இருந்து வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து போராட்டகாரர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தனர். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது செய்யப்பட்டு பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக ரயில் நிலையப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture