ராகுல் பிறந்த நாள்: இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடத்தப்பட்ட ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர்
குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தியின் 53வது பிறந்த நாள் விழா மாநில பொது செயலர் சாமிநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கும், காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு உள்ள காமராஜர் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அந்தந்த வார்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலர்கள் ஆறுமுகம், கோகுல்நாத், நகர செயலர் தாமோதரன், நகர துணை தலைவர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரன். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரின் பாட்டி. படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி, ஐமுகூ தலைவர் சோனியாகாந்தியின் மகனாக ராகுல் காந்தி ( ஜூன் 19, 1970) மகனான இவருக்கு 53, வயதாகிறகது. பிரியங்கா காந்தி என்ற தங்கையும் உள்ளார். 2004ல் தனது அரசியல் வாழ்வை துவங்கிய ராகுல், தனது தந்தையின் தொகுதியான உத்திரபிரதேசத்தின் அமேதியில் முதல்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 24 செப்டம்பர்2007 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் தனது தொடக்ககல்வியை டெல்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பின்னர் டேராடூனிலும் பயின்றார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ப்ளோரிடாவின் லோரின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரைனிடி கல்லூரியில் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் எம்.பில் பட்டம் முடித்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய ராகுல், தற்போது கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததான வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu