குமாரபாளையத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்

குமாரபாளையத்தில் வெறிநோய்  தடுப்பூசி முகாம்  இன்று தொடக்கம்
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்  குறித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்குகிறது

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் வீதி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் போவோர், வருவோரை துரத்தி சென்று கடித்து வருகிறது. இவைகளை கட்டுபடுத்த நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நகரமன்ற கூட்டத்திலும் இது குறித்து அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறினார்கள். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் விஜய்கண்ணன் கூறினார். தற்போது வீட்டு நாய்களுக்கு அரசு சார்பில் வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது.

இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் கூறியதாவது:குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து, மார்ச் 4, காலை 08:00 மணி முதல் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

வெறிநோய் (வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் நோய் ‘ரேபிஸ்’) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்களை பாதுகாக்க ஆண்டுதோறும் செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறிநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, 16-வது உலக வெறி நோய் தினமான இன்று ‘ஒன் ஹெல்த்ஜீரோ டெத்’ என்ற கருத்தின் அடிப்படையில், அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 150 நாடுகளுக்கு மேல் வெறிநோய் பாதிப்புக்கு ஆளாகி ஆண்டுதோறும் 59 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர். இதில் 95 சதவீதம் இறப்பு ஆப்பிரிக்கா, ஆசியாவில் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் 9 நிமிடத்துக்கு ஒருவர் வெறிநோயால் இறப்பதாக உலக சுகாதார நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:இந்தியாவில் இதுவரை வெறிநோய் பாதிப்பில் இறப்போர் தொடர்பான முழுமையான இறப்பு எண்ணிக்கை கண்டறியப்படவில்லை. இருந்தும் ஆண்டுக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரைஇறக்கலாம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 30 முதல் 60 சதவீதம்வரை 15 வயதுக்குள் உள்ள சிறார்கள்தான். மேலும் 97 சதவீத பாதிப்புகள், இறப்புகள் நாய்களால் பரவும்வெறிநோயால் மட்டுமே ஏற்படுகிறது.



Tags

Next Story
ai in future agriculture