குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாற்பெரும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, கல்லூரி ஆண்டுவிழா மற்றும் பேரவை நிறைவு விழா ஆகிய நாற்பெரும் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக சேலம்,7, அரசு கலைக் கல்லூரி, தமிழ்த்துறை தலைவர் மாது, தருமபுரி, அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன், குமாரபாளையம் எஸ்.ஐ. அன்பில்ராஜ் உள்பட பலர் பங்கேற்று, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கினர்.

தமிழ்த்துறை தலைவர் மாது பேசியதாவது:

மாணாக்கர்கள் உயர்கல்வி பெறுவதன் மூலமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் அதிக கல்லூரிகள் உள்ளன. மாணவர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும். வளர்ந்த நாடுகளில் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பது போல், நாமும் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும். பிற நாடுகளை ஒப்பிடுகையில், அறிவுசார் காப்புரிமை நாம் குறைவாகவே பெற்றுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளை கண்டுப்பிடிப்பதுடன், அறிவுசார் காப்புரிமை பெறுவதிலும் முனைப்பு காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ஞானதீபன், ரமேஷ்குமார், கண்ணன், அன்புமணி, காயத்ரி, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business