புருஷோத்தம பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா

புருஷோத்தம பெருமாள் கோவில்  கும்பாபிஷேக ஆண்டு விழா
X

குமாரபாளையம் புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா முகூர்த்தகால் நடுதலுடன் நேற்றுமுன்தினம் துவங்கியது.

பவானி கூடுதுறை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பக்தர்களின் பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!