பாஜக ஆயத்த கூட்டத்தில் பேசிய புதுவை அமைச்சர்
குமாரபாளையத்தில் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரும், தமிழக நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளருமான நமச்சிவாயம்
குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற சூழலையை தி.மு.க ஏற்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமர்சித்துள்ளார்.
குமாரபாளையம் அருகே சாணார்பாளையத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சரும் தமிழக நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளருமான நமச்சிவாயம் கலந்து கொண்டு, ஒன்பது ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நமச்சிவாயம் கூறியதாவது:
தமிழகத்தில் சிறுபான்மையினரை பாதுகாப்போம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வினரே சிறுபான்மையி னரை அழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. நடிகை குஷ்பு போன்றவரை தரக்குறைவாக பேசும் தி.மு.க.வினரால் பெண்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பு அளிக்க முடியாது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வினருக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் கதிரேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜ், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu