பா.ஜ.க. தொண்டர் வீட்டில் உணவருந்திய புதுவை அமைச்சர்
குமாரபாளையத்தில் பா.ஜ.க.தொண்டர் வீட்டில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உணவருந்தினார்.
குமாரபாளையத்தில் பா.ஜ.க.தொண்டர் வீட்டில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் உணவருந்தினார்.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்பொழுது தங்கள் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், இல்லம் தோறும் பா.ஜ.க. என்ற கோஷத்தை முன்னிறுத்தி, வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் பங்கேற்க வந்த புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பல்வேறு பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, திடீரென குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் நிர்வாகி மோகன் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தவர், உங்கள் வீட்டில் தான் இன்று காலை சிற்றுண்டி என தெரிவித்தார்.
இதனை அடுத்து மகிழ்ச்சி அடைந்த மோகனும் அவரது துணைவியாரும் உடனடியாக அவசர அவசரமாக காலை உணவு இருபது நபர்களுக்கு தயார் செய்து வழங்கினர். பிரசாரத்தின் போது, தொண்டர் வீட்டில் தான் உணவு அருந்துகிறேன் என தெரிவித்த 30 நிமிடங்களில்,அமைச்சருக்கு மட்டுமல்லாமல் அவருடன் இருந்தவர்களுக்கு, பிஜேபி தொண்டர் சுவையான விருந்து வைத்ததனை கண்டு புதுவை அமைச்சர் தமிழகத்தின் விருந்தோம்பலை கண்டு அசந்து போனார். மேலும் புதுவை அமைச்சரின் செயலால் தொண்டரும் மகிழ்ச்சி அடைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu