மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்

மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
X

குமாரபாளையம் அருகே மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி பொதுமக்கள் அரிசி தானம் பெற்றனர்.

குமாரபாளையம் அருகே மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி பொதுமக்கள் அரிசி தானம் பெற்றனர்.

குமாரபாளையம் அருகே மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி பொதுமக்கள் அரிசி தானம் பெற்றனர்.

கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பலரும் வெப்பம் தாங்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நிலத்தடி நீர் குறைந்து, அத்தியாவசிய தேவைக்கு கூட நீ இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது. காவிரியில் போதிய நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அவ்வப்போது குடிநீர் தேவைக்காக தண்ணீர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடி என்ற அளவில் பல மாதங்களாக நீடித்து வருகிறது. கிராமப்புற பகுதியில் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக பத்து நாட்கள் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை வருமா? என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இது போன்ற நிலையில் மழை வர வேண்டி பொதுமக்களிடம் அரிசி தானம் பெற்று, அதனை கஞ்சி காய்ச்சி சில கோவில்களில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்குவது வழக்கம். தற்போது கடும் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், மழையும் இல்லாமல் பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் குமாரபாளையம் பகுதியில் மட்டுமின்றி அனைத்து பகுதியிலும் மழை வந்து, குளிர்ச்சி நிலவ வேண்டியும், நிலத்தடி நீர் அதிகரிக்கவும், ஆற்றில் நீர் பெருகி, விவசாயம் செழிக்கவும் வேண்டி, குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பகுதி பெண்கள் சிலர் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கூடை வைத்துக்கொண்டு பாட்டுபாடி, அரிசியை தானமாக வாங்கினர்.

இதனை காய்ச்சி அப்பகுதியில் உள்ள கோட்டைமேடு காளியம்மன் கோவில், தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் பொதுமக்களுக்கு வழங்குவார்கள். இதனால் மழை வளம் பெருகும் என்பது ஐதீகம். பாட்டுப்பாடி அரிசி தானம் கேட்டு வரும் பெண்களிடம் அப்பகுதி பொதுமக்கள் தாராளமாக அரிசியை தானமாக வழங்கினர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!