அரசு பள்ளியில் பொது நல அமைப்பின் சார்பில் புதிய இணைய தளம் தொடக்கம்

அரசு பள்ளியில் பொது நல அமைப்பின் சார்பில் புதிய இணைய தளம் தொடக்கம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜே.கே.கே ரங்கம்மாள் பொதுநல அமைப்பின் சார்பில் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்த அமைப்பின் நிர்வாகி ஓம் சரவணா பேசினார்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் ஜே.கே.கே ரங்கம்மாள் பொதுநல அமைப்பின் சார்பில் புதிய இணைய தளம் தொடங்கப்பட்டது

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஜே.கே.கே ரங்கம்மாள் பொதுநல அமைப்பின் சார்பில் டிஜிட்டல் பங்களிப்பாக, பள்ளிக்கு புதிய இணையதளத்தை உருவாக்கி, அதன் துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா பங்கேற்று, பள்ளிக்கான புதிய இணையதள முகவரியை தொடக்கி வைத்தார்.

இந்த இணையதள முகவரியின் https://gbhsschoolkomarapalayam.in/ மூலம் 70 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இப்பள்ளியை பற்றி உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளும் அளவில் புகைப்படங்களும், வீடியோக்களும், பள்ளியின் சாதனைகளும் இவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் விவரங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு விழாக்கள், என்.சி.சி பயிற்சிகள், ஜே ஆர் சி, சாரணர் படை, தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணி திட்டம் போன்றவற்றின் புகைப்படங்களும் இவற்றில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஓம்சரவணா மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், கணினியின் பயன்பாடுகள், பயிற்சிகள், வருங்காலத்தில் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு பரிசுகளும், புத்தகங்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை தலைமையாசிரியர் அங்கப்பராஜ், பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி, ஆசிரியர்கள் கவிராஜ், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.




Tags

Next Story