குமாரபாளையத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி

குமாரபாளையத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை என மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிரதி அமாவாசை நாளில்தான் குமாரபாளையம் நகர் பகுதியில் மின் விநியோகம் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும். ஆனால் நேற்று காலை 11:00 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மாலை 05:00 மணி அளவில்தான் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.

மாதந்திர மின் வினியோகம் ரத்து என்பது முன்கூட்டி அறிவித்து விடுவார்கள். ஆனால் நேற்று எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல் இந்த மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. இது குறித்து அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தியடைந்தனர். இதனால் ஜவுளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இனி ஜூலை 17 அமாவாசை நாளில் மீண்டும் மின் இணைப்பு துண்டிப்பு நடைபெறவுள்ளது என அச்சத்தில் உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது