பள்ளிபாளையம்: வடிகால் வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பள்ளிபாளையம்: வடிகால் வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
X

பள்ளிபாளையம் அருகே வடிகால் வசதி கேட்டு சில்லாங்காடு பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் அருகே வடிகால் வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையம் அருகே குமாரபாளையம் சாலை, கலியனூர் ஊராட்சிக்குட்பட்டது பாரதியார் நகர். இங்கு வெளியேறும் சாக்கடை கழிவுநீர் வடிகால் இல்லாததால் சாலையில் குளம் போல் தேங்குவதாக கூறப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தி, துர்நாற்றம், சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில், இரவு 09:00 மணியளவில் சில்லாங்காடு பகுதியில் குமாரபாளையம் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் போலீசார் நேரில் வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Tags

Next Story
highest paying ai jobs