கல்யாண பெருமாள் கோவில் நிலத்தை ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு
பள்ளிபாளையம் அருகே கல்யாண பெருமாள் கோவில் நிலம் ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியில் உள்ள கல்யாண பெருமாள் கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். இந்தக் கோவிலை இந்து சமய அறநிலைத்துறைக்கு இயங்கி வரும் சூழ்நிலையில் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான விவசாய நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
கோவிலுக்கு அருகில் உள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து சட்டவிரோதமான தொழிலை செய்து வந்தனர். இதனை அடுத்து அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை அணுகி அந்த நிலத்தை மீட்டு மீண்டும் இந்து சமய அறநிலைத்துறைக்கு ஒப்படைத்தனர்.
தற்பொழுது கோவில் விழா காலங்களில் அந்த இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சூழ்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தனியாருக்கு ஏலம் விடுவதாக தகவல் அறிந்த பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்தை ஏலம் விடக்கூடாது, திருவிழாக் காலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தனியாருக்கு ஏலம் விட்டால் அவர்கள் பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்பொழுது பொங்கல் வைக்கவும் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தவும் போதிய இடவசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி படும் சூழ்நிலை ஏற்படும் எனக் கூறி ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஏற்கனவே அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மீண்டும் இந்து சமய அறநிலைத்துறைக்கு ஒப்படைக்க மறுத்த தனியார் தற்பொழுது ஏலம் எடுக்க முன்வந்துள்ளதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. குமாரபாளையம் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் வடிவுக்கரசி ஏலம் விட வந்த பொழுது ஒருவர் மட்டுமே ஏலம் எடுக்க முன்வந்ததால் மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார்.
இதனால் இன்று ஏலம் விடப்படாத சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் மீண்டும் ஏலம் விடக்கூடாது அப்படி ஏலம் விடுவதாக இருந்தால் பொதுமக்கள் சார்பில் ஏலம் எடுப்பதற்கு அதற்கு அனுமதிக்க வேண்டும் என மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu