குமாரபாளையம் ஜெட் பிரண்ட் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி, மேற்கு காலனி ஜெட் பிரண்ட் வீதி தார்சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டுமென்று, அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி மேற்கு காலனி ஜெட் பிரண்ட் வீதி, கடந்த இரண்டு மாத காலமாக குண்டு குழியுமாக உள்ளது. இந்த வழியே கடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

தற்போது, ஊரடங்கு காலம் என்பதால், வாகன நடமாட்டமின்றி சாலை உள்ளது. இதைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில், ஜெட் பிரண்ட் வீதி தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று, அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!