தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்!

தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்!
X

படவிளக்கம் : பள்ளிபாளையத்தில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் பலர் சேர்ந்தனர்.

பள்ளிபாளையத்தில் தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பொதுமக்கள் முன்னாள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

பள்ளிபாளையத்தில் தி.மு.க.வினர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பொதுமக்கள் முன்னாள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன்பேட்டை பகுதியில் திமுக ஒன்றிய இணை செயலாளர் தமிழ்ச்செல்வியின் கணவர் ஜான்சன் மற்றும் அவரது தம்பி வின்செண்ட் ஆகியோர் அங்குள்ள கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் கொக்கராயன்பேட்டை மற்றும் பாப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 60க்கும் மேற்பட்டோர் திமுக விலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்கள் அனைவருக்கு சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான தங்கமணி பேசுகையில், இந்த இயக்கம் எந்த நேரத்திலும் உங்களை கைவிடாது, உங்களுடைய கஷட நஷ்டங்களில் உங்களோடு உடனிருந்து, உங்களோடு ஒருவராக இருந்து உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் எனவும், ஆளுங்கட்சியில் இருந்து அதிமுகவிற்கு வந்துள்ளீர்கள் மேலும் ஆளுங்கட்சியான திமுக மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் எடப்படியார் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக திமுகவிலிருந்து அதிக அளவில் அதிமுக விற்கு வருகை தருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது அருகில் இருந்த பெட்டிக்கடை உரிமையாளர்களான சாகித் மற்றும் ரெஜினா ஆகியோர், திமுக இணை செயலாளர் தமிழ்ச்செல்வியின் கணவர் ஜான்சன் மற்றும் வின்செண்ட் ஆகியோர் தங்களிடம் தினசரி 250 ரூபாய் வரை மாமூல் கொடுக்கவேண்டும் எனவும் இல்லை எனில் கடை நடத்த விட மாட்டோம் என மிரட்டுவதாகவும், அவ்வாறு தர மறுக்கும் பட்சத்தில் கடைகளுக்கு அடியாட்களை அனுப்பி மது பாட்டில்களை உடைப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் எதற்காக மாமூல் தரவேண்டும் என கேட்டால் தங்களுடைய மது பாரில் குடிநீர் மற்றும் சைடிஷ் விற்பனை பாதிப்பதாகவும் தெரிவிப்பதாக கூறினர். மேலும் ஒரு நாள் கடை விடுமுறை என்றாலும் மறு நாள் அந்த மாமூலை சேர்த்து கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்ட மன்ற உறுப்பினருமான தங்கமணி இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வின்போது தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், கொக்கராயன்பேட்டை முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி , கொக்கராயன்பேட்டை ஊராட்சி தலைவர் மோகன்,பாப்பம்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெயவேல், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சசிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்