குமாரபாளையம் காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு
குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
குமாரபாளையம் இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தவமணி. இவர் வந்ததிலிருந்து சந்து கடைகள் ஒழிப்பு, கஞ்சா, புகையிலை விற்பனை ஒழிப்பு உள்ளிட்டவைகளில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகளை கைது செய்து பொதுமக்கள் பாராட்டினை பெற்றுள்ளார்.
அது போல் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்து அச்சத்தை போக்கி வருகிறார். மாணவ, மாணவியர்களுக்கு மனமகிழ் மன்றம் ஏற்படுத்தி தினமும், மாணவர்களிடையே போலீசார் நண்பர்கள் எனும் உணர்வை ஏற்படுத்த, விளையாட்டு பொருட்களான கேரம் போர்டு, செஸ் போர்டு, பூப்பந்து பேட், வாலிபால் போன்ற விளையாட்டுப் பொருள்களை வாங்கி வைத்துள்ளார்.
தினமும் மாணவ, மாணவியர் இங்கு வந்து விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள். நகர எல்லைக்குள் இருக்கும் ஆதரவற்றோர் மையங்களுக்கு சென்று, அங்குள்ள முதியவர்களுடன் உரையாடி, உணவு வழங்கி வருவதுடன், உங்கள் பிள்ளை போல் நான் இருக்கிறேன், என ஆறுதல் கூறியும் வருகிறார். அந்த மையங்களுக்கு தன்னால் ஆன சிறு, சிறு உதவிகளும் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் இவருக்கு பொதுமக்கள் சார்பில் பொதுநல ஆர்வலர்கள் பலரும் சவுண்டம்மன் கோவிலில் வைத்து பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu