பள்ளிபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்

பள்ளிபாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்
X

பள்ளிபாளையத்தில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

பள்ளிபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 493 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளியில் கல்வி பயிலும் தொலைதூரங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவியருக்கு அவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது .

இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கல்வி பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் சுமார் 305 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமை தாங்கினார். மேலும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. விழா நிறைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளிபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 188 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், திமுக நகர செயலாளர் குமார், திமுக வார்டு கவுன்சிலர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத் தலைவர், மாணவர்கள், மாணவிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மொத்தமாக 493 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil