குமாரபாளையத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கல்

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.
தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.
ஊட்டச்சத்து குறித்து டாக்டர்கள் கூறுகையில், ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓர் உணவு ஆகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் ,கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்து முடியும். ஊட்டச்சத்து, ஊட்டக்கூறு என்ற இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு.
ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும். இச்செயல்முறையின் மூலம் ஓர் உயிரினம் தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள உணவைப் பயன்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும், இதன் மூலம் ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை ஆதரிக்க உணவைப் பயன்படுத்துகிறது. இச்செயல் முறை உயிரினங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து அறிவியல் என்பது ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு ஆகும். இருப்பினும் இது பொதுவாக மனித ஊட்டச்சத்தையே வலியுறுத்துகிறது.
உயிரினத்தின் வகையே அதற்கு என்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதையும் அவற்றை அவ்வுயிரினம் எவ்வாறு பெறுகிறது என்பதையும் தீர்மானிக்கிறது. உயிரினங்கள் கரிமப் பொருட்களை உட்கொள்வதன் மூலமோ, கனிமப் பொருட்களை உட்கொள்வதன் மூலமோ, ஒளியை உறிஞ்சுவதன் மூலமோ அல்லது இவற்றின் சில கலவையின் மூலமோ ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.
அடிப்படை தனிமங்களை உட்கொள்வதன் மூலம் சில உயிரினங்கள் தங்களுக்குள்ளேயே ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்யலாம். சில உயிரினங்கள் ஏற்கனவே இருக்கும் ஊட்டச்சத்துக்களைப் பெற மற்ற உயிரினங்களை உட்கொள்ள வேண்டும். அனைத்து வகையான உயிரினங்களுக்கும் வாழ்வதற்கு கார்பன், ஆற்றல் மற்றும் நீர் மற்றும் பல்வேறு மூலக்கூறுகள் தேவைப்படுகின்றன. விலங்குகளுக்கு கார்போவைதரேட்டுகள், லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் போன்ற சிக்கலான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மற்ற உயிரினங்களை உட்கொள்வதன் மூலம் விலங்குகள் அவற்றைப் பெறுகின்றன.
உணவு தேடுவதற்கும் மனித ஊட்டச்சத்தை முன்னேற்றுவதற்கும் மனிதர்கள் விவசாயத்தையும் சமையலையும் உருவாக்கியுள்ளனர். தாவரங்கள் மண் மற்றும் வளிமண்டலத்தின் மூலம் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன. பூஞ்சைகள் அவற்றைச் சுற்றியுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அவற்றை உடைத்து மைசீலியம் மூலம் உறிஞ்சுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu