JKKN கல்வி நிறுவனங்கள் சார்பில் கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் வழங்கல்..!

JKKN கல்வி நிறுவனங்கள் சார்பில் கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் வழங்கல்..!
X

கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் வழங்கும் நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா.

JKKN கல்வி நிறுவனங்கள் சார்பில் பவானி அரசு மருத்துவமனைக்கு ரூ.2லட்சம் மதிப்பிலான கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் JKKN கல்வி நிறுவனங்கள் சார்பில் பவானி அரசு மருத்துவமனைக்கு கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பவானி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முன்னதாக நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பவானி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார்.

குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மருத்துவ சேவை இணை இயக்குனர் டாக்டர்.அம்பிகா சண்முகன், தலைமை தாங்கினார். அவர் பேசும்போது,

" தமிழக அரசுத்துறையில் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. JKKN கல்வி நிறுவனங்களின் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட கட்டிட மற்றும் தளவாடப்பொருட்கள் பவானி அரசு மருத்துவமனைக்கு பெரிதும் பயனுள்ளவையாக இருக்கும். அவைகளை வழங்கிய JKKN கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்ற JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா பேசும்போது, "J.K.K. ரங்கம்மாள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு மக்கள் நலப்பணிகளை நாமக்கல் மாவட்டத்தில் செய்து வருகிறோம். கல்விப்பணியோடு சமூகப் பணிகளையும் எங்கள் நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். நாங்கள் வழங்கியுள்ள இந்த பொருட்கள் நேரடியாக மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்." என்று பேசிய இயக்குனர் ஓம்சரவணா, பவானி மருத்துவமனைக்கு வழங்கவேண்டிய பொருட்களை முறையாக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் மதிப்பு ரூ.2 இலட்சம் ஆகும்.

நிகழ்ச்சியின் நிறைவாக டாக்டர்.வசந்தமஞ்சு நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் பவானி அரசு மருத்துவமனை நிர்வாகிகள், செவிலியர்கள் மற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself