உள்ளூர் வியாபாரிகளுக்கு கடை வைக்க அனுமதி மறுத்தால் போராட்டம்: அதிமுக அறிவிப்பு

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் வளாகத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.
உள்ளூர் வியாபாரிகளுக்கு கடை வைக்க அனுமதி மறுத்தால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த நேரிடும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் உள்ளூர் வியாபாரிகளுக்கு கடை வைக்க அனுமதிக்க வில்லை எனில் அ.தி.மு.க சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் கத்தாளப்பேட்டை பகுதியில் அண்ணா கட்டுமான தொழிலாளர்கள் சங்க பெயர் பலகை திறப்பு விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. தமிழக முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி கட்டிட கட்டுமான பணி தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தார். இதில் பேசிய தங்கமணி, என்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிதாக சுமார் 2 கோடி 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கட்டுமான பணிகள் முறைகேடாக நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில், நேரில் பார்வையிட்டார். அப்பொழுது வியாபாரிகளிடம் கட்டுமான பணியில் உள்ள குறைகளை குறித்து கேட்டறிந்த பின்னர் அவர் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
குமாரபாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் வளாகம் 90 நபர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது. ஏற்கனவே 200 பேர் வியாபாரம் செய்து வந்த பகுதியில் 90 நபர்களுக்கு மட்டும் கடை வைக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. மேலும் உள்ளூர் வியாபாரிகளை தவிர்த்து வெளியூர் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வெளியூர் வியாபாரிகளுக்கு கடைகள் வழங்குவதில் முரண்பாடு ஏற்பட்டால் அ.தி.மு.க போராட்டங்களில் ஈடுபடும். காய்கறி மார்க்கெட் மேலும் விரிவாக்க செய்ய சட்டமன்ற தொகுதி நிதியை நகராட்சி நிர்வாகம் கேட்டால் ஏற்பாடு செய்து தருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu