இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் இந்திய தேசிய மாதர் தேசிய சம்மேளனம் பள்ளிபாளையம் ஒன்றிய குழு சார்பில் தாசில்தார் அலுவலகம் முன்பு தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் மேங்கோ கார்டன் நிறுவனத்திற்கு விவசாய நிலத்தை விதிமுறை மீறி வீட்டு மனைகளாக பிரித்து கொடுக்கப்பட்ட, சட்ட விரோத அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் பூங்கொடி தலைமையில் நடந்தது. கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிர்வாகிகள் தவமணி, லட்சுமி, அலமேலு, லலிதா, சரசு, பாலசுப்ரமணி, காத்தவராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: குமாரபாளையத்தில் தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில், நல்லாம்பாளையம் மேங்கோ கார்டன் நிறுவனத்திற்கு, விவசாய நிலத்தை விதிமுறை மீறி வீட்டு மனைகளாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்த இடம் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசனம் ஆயக்கட்டுக்கு உள்பட்ட நெல் விளையும் பூமியில், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, நகர் ஊரமைப்பு துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகியோர் ரியல் எஸ்டேட்க்கு, சட்டவிரோதமாக அனுமதி கொடுத்து உள்ளனர்.
இங்குள்ள வாய்க்கால்கள், ஏரி, குளம், நீரோடை, ஆகியன கடுனையாக பாதிக்கப்பட்டு மாசு ஏற்படும் என்பதால், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் பலனில்லை. தலைமை அதிகாரிகள், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் பலனில்லை. சட்ட விரோதமாக அனுமதி கொடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu