சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
குமாரபாளையத்தில் சி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விசைத்தறி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்களுக்கு 75% சதவீத கூலி உயர்வு வழங்க கோரி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான பல கட்ட பேச்சுவார்த்தை இதுவரை தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் 75% சதவீத கூலி உயர்வு பெற்றுத்தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் அசோகன், அர்த்தனாரி, அன்புமணி, மணிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து கணேஷ்குமார் கூறியதாவது:குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது.
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் ஊரில் இல்லை என்று காரணம் கூறி, பேச்சுவார்த்தை தள்ளிக் கொண்டே போனது. பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டுமென கண்டன கோஷமிட்டனர்.
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் இருதரப்பினரிடம் பேசி, பிப். 13ல் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என தொழிலாளர்கள் மத்தியில் உறுதி கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் கலந்து பேசி பிரச்னையை ஓரளவு தீர்வுக்கு கொண்டு வந்துள்ளார்.
இது பற்றி குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி விசைத்தறி தொழிலாளர்கள் தொழிற்சங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி கூறியதாவது:பிப்.17ல் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதால் தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.14ல் சடையம்பாளையம் காந்திநகர், உழவர் சந்தை, பிப்.15ல் ராஜம் தியேட்டர் அருகில், கே.ஓ.என்.தியேட்டர் அருகில், பிப்.16ல் பாலிக்காடு, அம்மன் நகர் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu