குமாரபாளையத்தில் பூச்சொரிதல் விழாவிற்கு மலர்க்கூடைகளுடன் பெண்கள் ஊர்வலம்

குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்திட மலர்க்கூடைகளுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் பூச்சொரிதல் விழா குமாரபாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதனையொட்டி ராமர் கோவிலில் இருந்து மலர்க் கூடைகளுடன் பெண்கள், திருநங்கைகள், அம்மன் வேடமணிந்த பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க விட்டலபுரி, சேலம் சாலை, ராஜா வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று பூச்சொரிதல் விழா நடத்தப்பட்டது. அம்மனுக்கு ஒரு டன் அளவுக்கு மலர்கள் தூவி வழிபாடு நடைபெற்றது.
இது பற்றி அர்ச்சகர் வடிவேல் கூறியதாவது:
பூச்சொரிதல் விழாவையடுத்து ஒரு வார காலத்திற்கு அம்மனுக்கு நைவேத்தியமாக உணவு வகைகள் படைக்கப்படுவதில்லை. இது பக்தர்களுக்காக அம்மன் விரதம் இருப்பதாக ஐதீகம்.
திருச்சி அருகிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூஜை விழா அல்லது மலர் அணிவிக்கும் விழா (பூச்சொரியல் என்று அறியப்படுகிறது) என்பது ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இந்த திருவிழா பொதுவாக மாசி மாதத்தில் நடக்கிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் இக்கோவிலிலுள்ள மாரியம்மன் சிலை மீது மலர்களை தெளிக்கிறார்கள். இந்த காலத்தில், தெய்வம் தனது பக்தர்களின் நலனுக்காக 28 நாட்களுக்கு பச்சை பட்டினி விரதம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் விளைவாக, கோவிலில் உணவு சடங்கு செய்வது நடைபெறாது.
வீடுகளில் காப்புக்கட்டப்படுகிறது. பெண்கள் வீதிகளை அடைத்துக் கோலமிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் எல்லாம் திருவிழாவினைக் காண ஊர் விட்டு ஊர் செல்கிறார்கள். பூச்சொரிதல் விழாக்காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். நிறைய மணமுள்ள மலர்களைக் கொணர்ந்து மூலவரான பெண் தெய்வங்கள் மேல் சொரிந்து வணங்குவர்.
விரதமிருந்து வழிபடுதல், சக்திக்கரகம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், தீச்சட்டி ஏந்துதல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டம், பூம்பல்லாக்கு, தெப்பம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் அன்னதானம் எல்லாம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu