சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி!

சர்க்கரை நோய் வருமுன் காப்போம்   விழிப்புணர்வு பேரணி!
X
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி மற்றும் கல்லூரி சார்பில் சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி மற்றும் கல்லூரி சார்பில் சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் சர்க்கரை நோய் வருமுன் காப்போம் விழிப்புணர்வு பேரணி, பவானி கூடுதுறையில் இருந்து தொடங்கி, பவானி புதிய பேருந்து நிலையம், பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பவானி பழைய பேருந்து நிலையம், காளிங்கராயன் பாளையம், லட்சுமி நகர் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மாணவர்கள் மற்றும் மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் சைக்கிள்களில் பேரணியாக சென்றனர். சர்க்கரை நோய் வரும் முன் காப்போம் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு முன்னதாக நடைபெற்ற பேரணியை கல்வி நிறுவனத்தின் நிறுவனர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா கொடியசைத்து துவக்கி வைத்தனர். நடைபெற்ற பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளும் கலந்துகொண்டு சர்க்கரை நோயை ஒழித்திடுவோம் ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிடுவோம் என கோஷ ங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

குமாரபாளையம் ஜே.கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள்வழங்கும் விழா நடந்தது. ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமை வகித்தார். தலைவர் செந்தாமரை பங்கேற்று 185 மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் கல்வித்துறைக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து ஆசிரியைகள் எடுத்துரைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!