பா.ஜ.வினர் மயானத்தில் போராட்டம் நீட்டிக்க ஆயத்தம்
படவிளக்கம் :
குமாரபாளையம் நகராட்சி மயானத்தில், பா.ஜ.க.வினர் கல்லறை தோட்ட பணிகள் நடந்ததா? என்பது குறித்து பார்வையிட்டனர்.
பா.ஜ.வினர் மயானத்தில் போராட்டம் நீட்டிக்க ஆயத்தம்
குமாரபாளையத்தில் பா.ஜ.வினர் மயானத்தில் போராட்டம் நீட்டிக்க ஆயத்தம் செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அக். 31ல் நடந்த குமாரபாளையம் நகர் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. மயான வளாகத்தில் கல்லறை தோட்டம் அமைக்க நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலர் இடம் ஆய்வு செய்தனர். இது பற்றிய தகவல் பரவியதால், இரு நாட்கள் முன்பு பா.ஜ.க. மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில், பொக்லினை செயல்பட விடாமல் தடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லறை தோட்டம் அமைக்கப்படும் என்ற தீர்மானம் ரத்து செய்து கொடுக்க சொல்லி கேட்டனர். கலந்து ஆலோசித்து ரத்து செய்து தருவதாக கூறியதால், தர்ணா போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறினார்கள். நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு பா.ஜ.க.வினர் சென்றனர். அங்கு நகராட்சி ஆணையர் நாமக்கல் மீட்டிங் க்கு சென்றவிட்டார் என கூறியுள்ளனர். இது குறித்து வக்கீல் தங்கவேல் கூறியதாவது:
நகராட்சி அலுவலகம் சென்று தீர்மானம் ரத்து செய்த நகல் பெற சென்றோம். ஆனால் ஆணையர் நாமக்கல் மீட்டிங் சென்று விட்டார். ஆணையர் வந்ததும், தீர்மானம் ரத்து செய்வது குறித்து கலந்து பேசி, நல்லதொரு முடிவினை செய்து தருகிறோம் என்று பொறியாளர் ராஜேந்திரன் கூறினார். சரி என அங்கிருந்து வந்து விட்டோம். மயானத்தில் எதாவது கல்லறை தோட்ட பணிகள் நடந்ததா? என பார்த்து வந்தோம். எந்த பணியும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu