குமாரபாளையம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, திருவிளக்கு வழிபாடு
X

பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 

குமாரபாளையம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு மற்றும் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ நாளையொட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். சிவாய நமஹா, என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர்.

இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் காந்திநகர் பத்ரகிரியார் பிரார்த்தனை மையத்தில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!