ஜூலை 11ல் ஆனங்கூர், சமயசங்கிலியில் மின் நிறுத்தம்

ஜூலை 11ல்  ஆனங்கூர், சமயசங்கிலியில்  மின் நிறுத்தம்
X
ஜூலை 11ல் ஆனங்கூர், சமயசங்கிலியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

ஜூலை 11ல் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஆனங்கூர், சமயசங்கிலி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள தகவல்:

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் ஜூலை 11ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பின் வரும் பகுதிகளில், சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 11ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டுபாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தாகோயில், தாசக்கவுண்டம்பாளையம், பள்ளிக்கவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியாம்பாளையம், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
ai in future agriculture