குமாரபாளையத்தில் பொங்கல் திருவிழா கோலாகலம்

குமாரபாளையத்தில் பொங்கல் திருவிழா கோலாகலம்
X

படவிளக்கம் :

குமாரபாளையம் தனியார் கல்லூரி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பொங்கல் விழா, சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பானை வைத்து, பொங்கல் பொங்கி வரும் வேளையில் குலவை சத்தம் போட்டு பொங்கலை வரவேற்றனர். நீதிபதி மாலதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கி வாழ்த்தினார். செயலர் நடராஜன், பொருளர் நாகப்பன், நிர்வாகிகள் ஐயப்பன், கருணாநிதி, கார்த்திக், நந்தகுமார், உள்பட நீதிமன்ற ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்காவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நேபாள நாட்டை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். கரகாட்டம், நையாண்டி மேளம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேபாள நாட்டு ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாட்டு கலையை கண்டு ரசித்தனர். பூங்காவின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.


குமாரபாளையம் கல்லூரியில் தாளாளர் மதிவாணன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. ஒவ்வொரு துறை சார்பில் தனித்தனியாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர்கள் கல்லூரி வளாகத்தை வண்ண வண்ண பூக்களால், கரும்புகளால் அலங்கரித்திருந்தனர். மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பாரம்பரியத்தை எடுத்துரைத்தனர். பேண்டு வாத்திய இசைக்கு மாணவ, மாணவியர் குழு நடனமாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது