விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை

விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை
X

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

நேற்று கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது குறித்து சங்கமேஸ்வரன் கூறுகையில், நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிசங்க நிர்வாகி பாலுசாமி கூறுகையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இது எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இது பற்றி பேசினோம். ஜன. 7ல் மாலை 03:00 மணியளவில் இரண்டாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சுந்தரராஜ், ராஜேந்திரன், குமாரசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, பொன் கதிரவன், வெங்கடேசன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!