பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்: குமாரபாளையம் மாணவி சாதனை

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்: குமாரபாளையம் மாணவி சாதனை
X

குமாரபாளையம் ராகவேந்திரா பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டியில் குமாரபாளையம் மாணவி சாதனை படைத்துள்ளார்.

சேலம் மண்டல அளவிலான பெண்களுக்கான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் மாணவி யோகஸ்ரீ வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ள நிலையில் தமிழ்நாடு அணிக்காக தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் தமிழக அணிக்காக பங்கு பெற்று சிறப்பு செய்துள்ளார்.

பதக்கம் வென்ற மாணவிக்கும், பயிற்சியளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முரளிக்கும் கல்லூரி முதல்வர் விஜயகுமார் வாழ்த்து தெரிவித்ததோடு, போட்டியில் பதக்கம் வென்ற மாணவியின் விடுதி கட்டணம் தள்ளுபடி செய்வதாக கூறி, சாதனை மாணவியை ஊக்கப்படுத்தினார்.

ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் பள்ளியில் மூன்றாம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் ஆசிரியை திருமதி திவ்யா பாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ராகவேந்திரா கல்வி நிறுவனத்தின் தலைவர் தங்கவேல், ராகவேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

பள்ளியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு குழுக்களாக மாணவ மாணவிகளை பிரித்து அவர்களுக்கு தனித்தனியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் குண்டு எறிதல், பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் சிறப்பான முறையில் வருகை புரிந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டன. விழாவின் இடையில் மாணவ மாணவிகள் கராத்தே சாகசங்கள் உடற்பயிற்சி சாகசங்களும் திறமையாக செய்து காட்டினார். விளையாட்டு உள்ள ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முரளி கவனித்தார்.இறுதியாக பள்ளியின் ஆசிரியை கோமதி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது