முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் போலீஸார் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி  வீட்டில்  போலீஸார் சோதனை
X

பள்ளிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி கடையில் சோதனை நடைபெற்றது.

Former Minister - பள்ளிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்றது

Former Minister - நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு கடைகளில் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணை நடைபெற்றது.

கடந்த டிச. 15ல் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பள்ளிபாளையம் ஆருகே கோவிந்தம்பாளையம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். 2016 முதல் 2021 வரை அமைசார் பதவியில் இருந்த போது 4.85 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில் 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 2.30 கோடி ரொக்கப்பணம், 1.30 கிலோ தங்கம், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், வங்கி லாக்கர் சாவிகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்படி சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து அதனை மதிப்பீடு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்,தங்கமணியின் வீடு மற்றும் கடையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!