அதிக வட்டி வசூலித்து துன்புறுத்தலா ? போலீசில் புகார் தெரிவிக்கலாம்
அதிக வட்டிக்கு பணம் பெற்று துன்பமா? போலீசில் புகார் தெரிவிக்க காவல் ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையத்தில் அதிக வட்டிக்கு கடன் பெற்று துன்பப்படும் நபர்கள், குமாரபாளையம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆய்வாளர் தவமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாராவது, வட்டிக்கு பணம் பெற்றும், வட்டி செலுத்த முடியாமல் துன்பப்படுவதாக இருந்தாலும், ஆன்லைன் மூலம் பணம் பெற்று துன்பப்பட்டு கொண்டிருந்தாலும், அல்லது வேறு வகையில் அதிக வட்டிக்கு பணம் பெற்று துன்பப்பட்டுக் கொண்டி ருந்தாலும் மற்றும் எவ்வித பிரச்னையாக இருந்தாலும், உடனே குமாரபாளையம் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்துவட்டி வசூலிப்பவர்கள் பற்றி, தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்தனர். கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தவிப்பவர்கள், அச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, போலீசில் புகார் அளிக்கலாம்.
அதிக வட்டி வசூலிப்பதை தடுக்க, தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடை சட்டம், 2003ல் கொண்டு வரப்பட்டது. கடனை வசூலிக்க அடியாட்களை ஏவி விட்டு மிரட்டுதல், தாக்குதல் நடத்தவதால், கடன் பெற்றவர்கள் அதற்கு பயந்து, தற்கொலை செய்வது அதிகரித்தது. இதை தடுக்க அதீத வட்டி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.இதன்படி தினசரி வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி ஆகிய ஐந்து வகையான பெயர்களில், வட்டி வசூலிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu