பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
X

தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் திரண்ட ஊர் பொதுமக்கள்.

தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியை சேர்ந்தவர் சக்தி. தனியார் நூல் மில்லில் வேலை பார்த்துவரும் சக்தி, இரண்டு தினங்களுக்கு முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் ஐந்துபனை பகுதியில் நின்றிருந்த போது , ஆனங்கூரைச் சேர்ந்த மனோகரன் மகன் அபி, சக்தியின் வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இதனால், இருவரும் இடையே எழுந்த வாய்த்தகராறு, வாக்குவாதமாக மாறி, சக்தியை அபி தனது தந்தை மனோகரனை அழைத்து வந்து, சாதியை குறிப்பிட்டு, தந்தை- மகன் இருவரும் சக்தியை சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. உள்காயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்தி அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் காவல்துறையினர், தந்தை - மகன் இருவரையும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, சக்தியின் உறவினர்கள் ஐந்துபனை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் திரண்டர். காவல் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா