கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம்

குமாரபாளையம் கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் கவிஞர் நிறைமதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் நிறைமதி கவிஞர், நாடக ஆசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், என பன்முகம் கொண்டவர். இவர் சில நாட்கள் முன்பு காலமானார். இவருக்கு குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் முன்பு நினைவஞ்சலி கூட்டம் வழக்கறிஞர் மோகன் தலைமையில் நடந்தது.
இதில் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், பொதுநல ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், என பலதரபட்ட நபர்கள் பங்கேற்று நிறைமதியின், தமிழ் சேவை குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. அன்பழகன், பகலவன், விடியல் பிரகாஷ், ரவி, சித்ரா, ஆறுமுகம், ஜானகிராமன், சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூண் அமைப்புக்குழு சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் நினைவுத்தூண் அருகே கவிஞர் மல்லை ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மே 17 இயக்க நிர்வாகி திருமுருகன் காந்தி பேசியதாவது:
மொழிப்போர் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும், இந்த தியாகிகளின் வரலாறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக்கப்பட வேண்டும், என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பொருத்தமானது, வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு தமிழருக்கே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு பிரதமர் 623 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறார். ஆனால் அனைவரும் பேசும் பிற மொழிகளுக்கு எல்லாம் சேர்த்து 23.5 கோடி நிதி ஒதுக்குகிறார்.
பா.ஜ.க.வினரும், இவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. வினரும் தமிழின எதிரிகள். ராஜாஜி இந்தியை தமிழகம் கொண்டு வர பாடுபட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், அப்போதுதான் சமஸ்கிருதம் தமிழகத்தில் கொண்டுவர முடியும், என்றார். எந்த வடநாட்டுக்காரராவது தமிழர்களின் கடையில், மளிகை சாமான், துணிமணிகள் வாங்குகிறாரா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களது ஆட்கள் வியாபாரம் செய்யும் கடையில் மட்டும் தான் வாங்குகின்றனர். காந்தி சுட்டுகொல்லப்பட்ட இடம் பிர்லாவின் வீடு. பஜாஜ், டாட்டா, பிர்லா உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் தயாரிக்கும் வெளிநாட்டு துணி உற்பத்தி ஆலைகளுக்கு துணையாக இருந்து கொண்டு, கதருக்கு ஆதரவாக போராட்டம் என காங்கிரஸ் அப்போதே இரட்டை வேடம் போட்டது இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திருமுருகன் காந்தி கூறியதாவது: ஒன்றிய அரசு இந்தியை கட்டாயமாக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்கள். பாடத்தில், நுழைவுத்தேர்வில், மத்திய அரசு அலுவலகங்களில் கொண்டு வருகிறார்கள். இதனை தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்த்து கொண்டுள்ளது.
தமிழ் மொழி காக்க ஆரசியல் கட்சியினர், கட்சி கடந்து ஒன்று திரள வேண்டும்.1965ல் குமாரபாளையத்தில் நடந்த மொழிப்போர் போராட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் பல இடங்களில் மொழிப்போருக்காக உயிரிழந்த இடங்களில் நினைவு சின்னங்கள் எழுப்ப வேண்டும். மொழிப்போரை வரலாற்று நூலில் பாடமாக கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடமாநிலத்தில் உள்ள பல்வேறு தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். பல தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள். இந்த தொழிலாளர்களை பா.ஜ.க. அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாத வகையில் தமிழக அரசு திட்டங்கள் தீட்ட வேண்டும். வாகனங்களில் நம்பர் பிளேட்களில் தமிழ் எண்களை எழுதிக்கொள்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள். தமிழ் எண்கள் எழுதிக்கொள்ளலாம் என அரசு ஆணையே இருக்கிறது. அவர்களை பாராட்ட வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்தல் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைகாட்சி நிர்வாகி வாலாசா வல்லவன், நிர்வாகிகள் பகலவன், அன்பழகன், பாலமுருகன், ரவி உள்பட பலர் பேசினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu