கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நகராட்சி கமிஷனரிடம் ம.நீ.ம., மனு

கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நகராட்சி கமிஷனரிடம் ம.நீ.ம., மனு
X

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி நகர செயலர் சித்ரா தலைமையில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் நகரின் கழிவுநீர் செல்லும் பெரிய வடிகாலான கோம்பு பள்ளம் செல்கிறது. இந்த வீதியில் அப்பன் மேடு என்ற இடத்தில் சாலையை கடக்கும் இடத்தில் தரைமட்ட பாலம் உள்ளது.

சிறிய மழை வந்தாலும் அதிக தண்ணீர் இந்த பள்ளத்தில் செல்வதால் பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் இந்த இடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு, உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட காலமாக பல தரப்பினர் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. நேற்றுமுன்தினம் பெய்த சிறு மழையில் அதிக தண்ணீர் சென்றதால் இந்த சாலை துண்டிக்கப்பட்டது.

இது குறித்து குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட கமிஷனர் சசிகலா இது பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதில் மகளிரணி நிர்வாகிகள் ரேவதி, உஷா, மாவட்ட துணை செயலர் சிவகுமார், நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்