குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சிக்கு மனு

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சிக்கு மனு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குமாரபாளையம் நகராட்சியில் அரசு கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் குமாரபாளையம் நகராட்சிக்கு சார்ந்த சுற்றுச்சுவர்கள், கோம்புப்பள்ளத்தில் உள்ள பக்கவாட்டு சுவர்களில் விழிப்புணர்வு பற்றிய ஓவியங்களை வரைந்து வைத்தால், படிக்க வரும் மாணவர்கள், அவ்வழியில் செல்லும் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும்.

தேவையற்ற பதிவுகளை சுற்றுச்சுவற்றில் ஒட்டுவதற்கு பதிலாக விழிப்புணர்வு பற்றிய ஓவியம் வரைந்து வைத்தால் வருங்கால தலைமுறைகள் இதனை பார்க்கும்போது நல்லவொரு சிந்தனை ஏற்படும்.தண்ணீரை வீணாக்காதீர்கள், மரக்கன்றுகள் நடுவோம், மழை வளம் பெறுவோம், என்பது உள்ளிட்ட தலைப்புகளில் ஓவியங்கள் வரையலாம். தாங்கள் ஆய்வு செய்து ஓவியங்கள் வரைவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் ஜி.ஹெச். அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவினை மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, விமலா, மல்லிகா உள்ளிட்ட பலர் கொடுத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture