துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது

துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் துணிக்கடையில் பணம் திருடிய நபர் கைது செய்யபட்டார்.
குமாரபாளையம் சேலம் சாலையில் ஜவுளிகடை நடத்தி வருபவர் பழனியப்பன், 43. இவர் காலை 9, மணியளவில் தனது கடையை திறந்தபோது, ஒரு நபர் வந்து துணி வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். பழனியப்பன் சற்று காத்திருங்கள் என்று கூறி, சுத்தம் செய்யும் பணியை செய்ய துவங்கியுள்ளார். அதற்குள் அந்த நபர் கடையின் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்ததை பழனியப்பன் கவனித்து, சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்தனர். அந்த நபரை போலீஸ் ஸ்டேஷனில் பழனியப்பன் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை செய்ததில் அவர் பெயர் ராஜசேகர்,38, என்பதும், ஈரோடு, காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பழனியப்பன் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து, திருடிய பணம் ஆயிரத்து 860-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்