தெரு விளக்குகள் அமைத்ததற்கு நன்றி தெரிவித்த மக்கள் நீதி மய்யம்

குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியில் மூன்று மின் கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருந்தது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் தெரு விளக்குகள் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியில் மூன்று மின் கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லாமல் இருந்தது. இதனால் காவிரி கரையோர பகுதி என்பதால் அடிக்கடி பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வெளிவரத் தொடங்கின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாடி வந்தனர்.
பொதுமக்கள் அச்சம் நீங்க, மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, விமலா ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலித்த நகராட்சி நிர்வாகத்தினர் மூன்று மின் கம்பங்களில் புதிய மின் விளக்குகள் அமைத்தனர். இதையடுத்து,மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
1978இல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, பின் 1984இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 1990இல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது. குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 14 இடங்களிலும், அ.தி.மு.க 10, சுயேச்சை 9 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
ஈரோட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கைலி (அ) லுங்கி (அ) வேட்டி ஏற்றுமதியாகிறது. இங்கு தயாராகும் கைலிகள் அதிக தரமானவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்திலுள்ள பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன.
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததி லிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu