வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க கரும்பு சாறு கடைகளில் திரண்ட பொதுமக்கள்
படவிளக்கம் :
வெயிலின் தாக்கம் சமாளிக்க குமாரபாளையம் கரும்பு சாறு மற்றும் பழக்கடைகளில் கடைகளில் பொதுமக்கள் திரண்டனர்.
வெயிலின் தாக்கம் சமாளிக்க கரும்பு சாறு கடைகளில் திரண்ட
பொதுமக்கள்
வெயிலின் தாக்கம் சமாளிக்க கரும்பு சாறு மற்றும் பழக்கடைகளில் கடைகளில் பொதுமக்கள் திரண்டனர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் பல நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அரசியல்வாதிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். கடும் வெயில் நேரத்திலும் கட்சி தலைவர்கள் சளைக்காமல் பிரச்சாரம் செய்தனர். கட்சி தொண்டர்கள், மகளிரணியினர் வீதி, வீதியாக கொடிகளை பிடித்தவாறு சென்று ஆதரவு திரட்டினர். மேலும் வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல், ஓட்டுச்சாவடிகளை தயார் நிலையில் வைத்திருத்தல், ஓட்டுப்பதிவு மெசின்கள் எடுத்து வந்து பாதுக்காப்பாக வைத்திருத்தல், சம்பந்தபட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வசம் மெசின்களை ஒப்படைத்தல், ஓட்டுச்சாவடி எல்லையில் கோடிட்டு வைத்தல், உள்ளிட்ட பல பணிகளை வெயிலின் தாக்கத்தால் சலிக்காமல் செய்தனர். டி.ஐ.ஜி, எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர். கடும்கோடை வெப்பத்தில் அனைத்து தரப்பினரும் களைப்பு நீங்கிட, இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு, பழச்சாறு உள்ளிட்ட கடைகளில் திரண்டனர். இளநீர், பழங்கள் விலை அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்துகொண்டுள்ளனர். வழக்கமாக இருந்த கரும்பு சாறு கடைகளை விட தற்போது எண்ணிக்கையில் அதிகம் காணப்படுகிறது. இது குறித்து கரும்பு சாறு கடை வியாபாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு அதிகம் வருகின்றனர். இதனால் கரும்பு சாறு கடையினர் மகிழ்ச்சியடைந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தாண்டு நுங்கு கடைகளை காண முடியவில்லை என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu