கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் குமாரபாளையம் பூங்காவில் பொதுமக்கள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் குமாரபாளையம்  பூங்காவில் பொதுமக்கள்  மகிழ்ச்சி
X

குமாரபாளையம் அருகே பூங்காவில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை காண முடிந்தது. (சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு அருகே உள்ள அம்மா பூங்கா )

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்குப் பின்னர் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பூங்காவுக்கு வருகின்றனர்.

குமாரபாளையம் :

குமாரபாளையம் அருகே பூங்காவில் பொதுமக்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் இருப்பதை காண முடிந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே உள்ள அம்மா பூங்கா பல மாதங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், இந்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்ட தகவல் சரிவர எல்லோருக்கும் சென்று சேரவில்லை. திருமண முகூர்த்தங்கள் உள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் பொதுமக்கள் பலரும் இந்த பூங்காவிற்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து பல நாட்கள் மழை வந்த நிலையில், நேற்று மாலை மழை இல்லாததால் இதமான காற்றில் உற்சாகமாக பொழுதை பொதுமக்கள் கழித்தனர். பொதுமக்கள் அதிகம் வர தொடங்கியுள்ளனர். இந்த பூங்கா புறவழிச்சாலை ஓரமாக இருப்பதால், வாகனங்கள் அதி வேகத்தில் செல்கின்றன. பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே, நகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிகைவிடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!