பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சி
படவிளக்கம் : பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சி பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப். 19ல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன், நகர தலைவர் சேகர் உள்பட பலர் வார்டு வாரியாக பா.ஜ.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பா.ஜ.க.அரசு திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர் பெற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து நகர அரசு தொடர்பு பிரிவு தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:
பா.ஜ.க. அரசின் திட்டமான உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர், இலவச அடுப்பு, லைட்டர், டியூப், ரெகுலேட்டர் ஆகியன வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் மிகுத்த பயன் பெற்று வருகிறார்கள். இரண்டாவது சிலிண்டருக்கு 340 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் 20 தொண்டர்கள் இணைந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும், பிற கட்சியிலிருந்து, தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்க்க குழு அமைத்து செயல்படுகிறார்கள் என்பது போல், பிற கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு உறுப்பினர்கள் இணைத்து வருகிறார்கள். இதனொரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க.வில், பல்வேறு கட்சியை சேர்ந்த ஆண், பெண் உள்ளிட்ட 20 நபர்கள் வரதராஜன் தலைமையில், மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் முன்னிலையில் இணைந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறினார்கள். இந்த இணைப்பு நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜண்ணன், நகர பொது செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu