மழையால் தணிந்த வெப்பம் பொதுமக்கள் மகிழ்ச்சி!

மழையால் தணிந்த  வெப்பம் பொதுமக்கள் மகிழ்ச்சி!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் நேற்று இரவு மழை பெய்தது.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு 08:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை ஆகியவற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் வாய்க்கால் போல் ஓடியது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் அவஸ்தைக்கு ஆளாகினர். தீபாவளி முன்பு தினமும் பெய்த மழை பெய்ததால், அனைத்து வியாபாரிகளும் கலக்கமடைந்தனர்.

நவ 10,11 இரு நாட்கள் மட்டும் மழை இல்லாமல் இருந்தால் ஓரளவு வியாபாரம் செய்து விடலாம் என பிரார்த்தனை செய்தனர். அதன்படி இரு நாட்களும் மழை இல்லாமல், அனைத்து வியாபாரிகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Tags

Next Story
ai in future agriculture