குமாரபாளையம் அருகே விஷம் வைத்து மயில்கள் கொன்று குவிப்பு

குமாரபாளையம் அருகே விஷம்  வைத்து மயில்கள்  கொன்று குவிப்பு
X

குமாரபாளையம் அருகே மூட்டைகளில் கொல்லப்பட்ட மயில்கள்.

குமாரபாளையம் அருகே விஷம் வைத்து மயில்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பறவையான மயில்கள் உள்ளிட்ட பறவையினங்கள் மற்றும் எலிகள் விவசாய நிலங்களில் தானியங்களை உண்பது வழக்கம். இதனால் சில சமூக விரோதிகள் விஷம் கலந்த தானியங்களை போட்டு வைத்து மயில்களை கொன்று வருவது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலை பச்சாம்பாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள வடிகால் பள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட தேசிய பறவைகளான மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டு, கோணிப்பைகளில் மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் போட்டு சென்றுள்ளனர். மூட்டைகளில் இருந்த மயில்களின் உடல்களை நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனைக் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டனர். தேசிய பறவை என்றும், இறைவன் முருகனின் வாகனம் என்றும் வழிபடும் தேசியவாதிகள், ஆன்மீக வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture