பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள்: பக்தர்களை கவர்ந்த தாமரை மலரில் ஆறு குழந்தைகள்

பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள்: பக்தர்களை கவர்ந்த தாமரை மலரில் ஆறு குழந்தைகள்
X

குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் தாமரை மலரில் ஆறு குழந்தைகள் அலங்காரம், முருகனுக்கு சிவன் அலங்காரம், சிவனின் நெற்றிக்கண் திறந்து இருந்த அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

குமாரபாளையத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குமாரபாளையம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், பால் குடங்கள் எடுத்தவாறு பெண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மஞ்சள் ஆடையணிந்து பங்கேற்றனர்.

கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு யாக சாலை பூஜை, சங்கு பூஜை நடந்தது. தாமரை மலரில் ஆறு குழந்தைகள் அலங்காரம், முருகனுக்கு சிவன் அலங்காரம், சிவனின் நெற்றிக்கண் திறந்து இருந்தது, ஆதிஷேசனுடன் விநாயகர் அலங்காரங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

கே.ஓ.என். தியேட்டர் அருகே உள்ள முருகன் கோவில் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட அலகு குத்தியவாறு வந்தனர். உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், தேவாங்கர் மாரியம்மன் கோவில் முருகன் கோவில், அனைத்து சிவன் கோவில்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து ஆடி வந்தனர். வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருவீதி உலா நடந்தது.

Tags

Next Story
ai solutions for small business