பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் இயங்குவது எப்போது? சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு

பள்ளிபாளையத்தில் விசைத்தறிகள் இயங்குவது எப்போது? சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்ப்பு
X
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள பள்ளிபாளையம் விசைத்தறிகள் இயங்க, அரசு அனுமதிக்க வேண்டும் என்று சிறுநூல் வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவை, தற்போது கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. விசைத்தறி ஜவுளியின் முக்கியத்தேவையாக உள்ள கோன்கள் எனப்படும் ஜவுளி நூல்களை, மூட்டைகளாக விசைத்தறி கூடங்களுக்கு தரும் சிறு நூல் வியாபாரிகள், ஊரடங்கு காலம் எப்போது முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து, சிறுநூல் வியாபாரி குமரேசன் கூறியதாவது: பள்ளிபாளையத்தில் சிறுநூல் வியாபாரம் நடைபெற்றாலும், எங்களுடைய தொழில் முழுவதும் அருகில் உள்ள ஈரோடு மாவட்டத்தை நம்பியே உள்ளது. பள்ளிபாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் அனைத்தும் ஈரோடு ஜவுளி சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, பின்பு பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

முழு ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளதால், சிறு நூல் வியாபாரிகளான நாங்களும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறோம். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் விசைத்தறிகள் மீண்டும் இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்தால் எங்களுடைய வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறும். விசைத்தறிகள் இயங்குவதற்கு, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஈரோட்டில் ஜவுளித்தொழிலுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!