பள்ளிபாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகித ஆலை குடியிருப்பில் அமைந்துள்ள, பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பள்ளிபாளையம் அடுத்துள்ள எஸ்.பி.பி. காலனி பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து 4 நாட்களாக பல்வேறு கட்ட பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க அனைத்து விமானங்களுக்கும், சுப்ரமணிய சுவாமிக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் சுப்ரமணிய சுவாமி, மகா அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் குமாரபாளையம், பள்ளிபாளையம், சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேக நிகழ்வை ஒட்டி முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது சேஷ சாயி காகித ஆலய நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் செந்தில், ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu